(தென்) சென்னை சங்கமம்

இந்த வருடமும் சென்னை சங்கமம் தென் சென்னை சங்கமம் ஆகத்தான் இருக்கிறது. என் வாழ்நாளுக்குள் அல்லது நான் வீட்டை மாற்றுவதற்குள் ஒரு சென்னை சங்கமத்தையாவது சென்னை பாரி முனை @ parry's corner - இல் பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். கனிமொழி ஆவன செய்யட்டும்.

ஒரு சில விஷயங்களைத் தவிர, சென்னை சங்கமம் வரவேற்க தகுந்ததாகத் இருக்கிறது. அதனுடன் தொடர்புடைய அரசியல் சாயங்களைத் தவிர்த்துப் பார்த்தால் இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சியே. பழந்தமிழர் கலைகள் உருமாறும் அல்லது வழக்கொழிந்து போகும் அபாயத்தில் இது போன்ற முயற்சிகள் நம்பிக்கை நட்சத்திரம்.

இந்த வருடமும் மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடி, கரகாட்டம் போன்றவை இடம் பெறுகின்றன. அதனுடன் சுவை கூட்டுவதற்கு பல அறுசுவை உணவகங்களும் பங்கு பெறுகின்றன. தாஜ், ரெயின் ட்ரீ, இருட்டுக்கடை ஹல்வா போன்றவை தரும் ஆதரவு மகிழ்ச்சி தருகிறது.

கூடவே இந்த ஆதரவு தொடருமா என்ற கவலையும் எழுகிறது.

சென்னையின் இசை விழா கோலாகலங்களின் தொடர்ச்சியாக சென்னை சங்கமம் அமைவது ஒரு நல்ல ஆரம்பம். சென்னையை பார்ப்பதற்கு நிறைவாக உள்ளது. ஒருபுறம் மியூசிக் அகாடமியில் Russian ballet நடக்கும்போது மறுமுனையில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஓயிலாட்டமும் மயிலாட்டமும் நடந்தது.

உலகமயமாக்கலின் உள்ளூர்மயமாக்கல் என்று கூறலாமா இதை?

எழுதுங்கள் உங்கள் கருத்தை ............

1 comment:

Sriram said...

Karthika .... as I said better part of chennai ends with south.... pls shift your residence....!!!